Skip to content

ஒடிசா கோர ரயில் விபத்து…. கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 2 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்  288 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டிருப்பதவர்களை போராடி மீட்டு வருகின்றனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸில் 867 பயணிகள் சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் முழுவிபரம் வௌிவரவில்லை. விபத்தில்

சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.  இச்சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையே அதிரவைத்துள்ளது. 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது. ஆனால் இந்த 3 ரயில்களும் எப்படி விபத்திற்குள்ளானது என்பது இதுவரை தெரியவில்லை.  2வது நாளாக ரயிலில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்தில்  படுகாயமடைந்த 250 பேர் சிகிச்சைக்காக சென்னை கொண்டு வரவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. பாத்ராக் பகுதியில் இருந்து 250 பயணிகளுடன் நாளை காலை 9 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை வந்தடைய வாய்ப்புள்ளது.

இந்தநிலையில் இக்கோரவிபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார்.  இதனை தொடர்ந்து நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது… ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!