தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (22.6.2023) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தலைமை செயலகத்தில் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சி.நாகப்பன் , உறுப்பினர்கள் நீதியரசர் ஆதிநாதன், தீனதயாளன்
ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.