இந்திய மக்களின் அன்றாட உணவில் தக்காளி தவிர்க்க முடியாத ஒரு பழவகை ஆகிவிட்டது. அரிசி , சப்பாத்தி என தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் மெயின் உணவில் வித்தியாசம் இருந்தாலும், கூட்டு, ரசகம், சாம்பார் ஆகியவற்றில் தக்காளியை சேர்த்துக்கொள்வதில் இந்தியா முழுவதும் வித்தியாசமின்றி மக்கள் தக்காளியை பயன்படுத்துகிறார்கள்.
2 மாதத்திற்கு முன் ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்ற தக்காளி இன்று தினமும் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.80க்கும், சில்லறை விலையில் ரூ.100க்கும் விற்பனை யானது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி ஒருகிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனையானது. வெளியூர்களில் ரூ.80 வரை விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே பெய்த மழை காரணமாக தக்காளி செடிகள் பாதிக்கப்பட் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக விலை உயர்ந்து கொண்டே இ ருக்கிறது.
இன்னும் ஒருமாதத்திற்கு அதே நிலை தான் நீடிக்கும். அதன் பிறகு தான் தக்காளி விலை குறையத்தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
சின்னவெங்காயத்தின் விலையும் தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையானது. பெரிய வெங்காயம் கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும், கத்தரிக்காய் கிலோ ரூ.40 முதல் 50 வரையிலும் விற்கப்படுகிறது.
பீன்ஸ் கிலோ ரூ.90 முதல் 100 வரையுலும், உருளைக்கிழக்கு ரூ.25க்கும், கேரட் ரூ.60, முருங்கைக்காய் ரூ.50க்கும் விற்பனையாகிறது.
தக்காளியும், சின்னவெங்காயமும் போட்டி போட்டு விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் பீன்ஸ் கிலோ ரூ.100க்கு விற்பனையானாலும் அது தமிழகத்தில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படுவதில்லை. எனவே தக்காளி, சின்னவெங்காயத்துக்கு இடையே தான் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.