ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 4ம் நாளான இன்று (26ம் தேதி) காலை ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், மகரி, சந்திர ஹாரம், வயிர 3 அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை முன் மார்பில் சாற்றிக் கொண்டு, பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.