அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் மியூஸியத்தில் ‘காட்ஃபாதர்’ புகழ் மர்லான் பிரான்டோவை, உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “‘கல்கி 2898-AD” கிளிம்ப்ஸ் வீடியோவை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோவில் நேற்று நடைபெற்ற காமிக்-கான் விழாவில் வெளியிடபட்டது. இந்த பாடத்தில் கமல்ஹாசன் முக்கிய வில்லானக நடித்துள்ளதால், அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் கமல், தனது கதாபாத்திரத்தை மெருகு ஏற்றுவதற்காக இப்பொது அமெரிக்காவில் தங்கியுள்ளார். நேற்றைய தினம் தெஸ்பியன் ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனை கலைஞரும் நெருங்கிய நண்பருமான மைக்கேல் வெஸ்ட்மோரையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
தற்போது, கமல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது, அமெரிக்காவில் உள்ள ஆஸ்கார் (அகாடமி) மியூஸியத்திற்கு வருகை தந்த ரஹ்மான் மாற்றம் கமல் பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் ‘தி காட்பாதர்’ படத்தை ஒன்றாக கண்டு மகிழ்ந்தனர்.