சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சங்கம. சார்பில் பொதும மக்களின் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளூர் பொதுமக்களை தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணை ஆணையர் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தையும் கண்டித்து அனைத்து கடை வியாபாரிகள் சங்கம் மற்றும் ச.கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பில் பொதுமக்களின் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் சமயபுரம் மாரியம்மன்
கோயிலுக்கு பாத்தியப்பட்ட உள்ளூர் கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் இலவச தரிசனம் செய்து வந்தனர்.இந்நிலையில் உள்ளூர் பொதுமக்களை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணைஆணையர் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்து சமயபுரம் கடைவீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி கட்டியும் கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து சமயபுரம் புது பேருந்து நிலையத்திலிருந்து சன்னதி வீதி வரை அறவழியில் அமைதி பேரணி செல்லவிருந்த நிலையில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார் போராட்டக்காரர்களை மறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேரணியை தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் ஏடிஎஸ்பி கோடிலிங்கம்,லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம், கோயில் இணை ஆணையர் கல்யாணி, மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அருள் ஜோதி மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.