தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் இன்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வருகை பதிவேடு உள்ளிட்ட

பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

