தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது.
இதேபோல் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனியின் பக்கம் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையம், மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டன.
பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எரியவிட்டபடி சென்று வந்தன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும் இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.