தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு காலையிலும் மாலையிலும் பள்ளி மாணவர்கள் சென்றுவருவதற்காக நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, மீண்டும் பேருந்தை இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பழைய கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.கவிதா, இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து அரசுப் பொக்குவரத்துகழக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மீண்டும் பழையபடி பள்ளி சென்றுவருவதற்கு வசதியாக நகரப் பேருந்துகள்

