தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கும்பகோணம் அருகே ஏராகரத்தில் நடைப் பெற்றது. நிகழ்விற்கு பழவாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர், சாமிநாதன்செம்மங் குடி சின்னதுரை தலைமை வகித்தனர். மதகரம் ரகுபதி, ஆலமன் குறிச்சி ராமநாதன் முன்னிலை வகித்தனர். இதில் நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து உறுதிமொழி ஏற்கப் பட்டது. தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை விமல் நாதன் நம்மாழ்வார் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து இனி வரும் காலங்களில், இயற்கை வழி வேளாண்மையை மேற்கொள்ளவும், இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த, நஞ்சில்லாஉணவுப் பொருட்களை மட்டுமே உட்கொள்வோம். இது குறித்த விழிப்புணர்வை, பொதுமக்கள் குறிப்பாக மகளிர் இடையே ஏற்படுத்த உறுதிமொழி மேற்க் கொண்டனர்.
நிறைவாக புவனேஸ்வரி நன்றி கூறினார்.