ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும், பென்ஷன் நிலுவைத்தொகையை பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என்பன உள்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துறை அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரமாக நடந்த அந்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது. இதனைத்தொடர்ந்து வரும் 9ம் தேதி துவங்கி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கள் அறிவித்துள்ளன..