Skip to content
Home » வருமான வரியில் எந்தவித மாற்றமும் இல்லை…. இடைக்கால பட்ஜெட் விவரம்

வருமான வரியில் எந்தவித மாற்றமும் இல்லை…. இடைக்கால பட்ஜெட் விவரம்

  • by Senthil

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி திட்டம் அமல்படுத்தப்படும்.  சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளி்க்கப்படும்.  10 ஆண்டுகளில்  30 கோடி பெண்களுக்கு  தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள்

செய்யப்பட்டுள்ளது. 2027க்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வளர்ச்சியின் பலன்கள் மக்களை சென்றடைந்துள்ளது.  விவசாயிகள், ஏழைகள், பெண்கள், மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

மின்சார வாகன உற்பத்திக்கும், சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தவும் ஊக்கம் தரப்படும்.

10 வருடத்தில் இந்தியாவுக்கு 500 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்துள்ளது.

40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில்பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.

நிதிபற்றாக்குறை 5.1% ஆக கட்டுப்படுத்தப்படும். வருங்காலத்தில் 4.1%க்கும் கீழ் குறைக்கப்படும்.

வரி செலுத்துவோரின்  எண்ணிக்கை   இதுவரை இல்லாத அளவுக்கு2.4 மடங்கு  உயர்ந்துள்ளது.

அரசின் செலவு  ரூ.44.90 லட்சம் கோடி. பாதுகாப்பு துறைக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.  மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும்.   இந்த ஆண்டு 1.3 லட்சம் கோடி  வட்டியில்லா கடன் வழங்கப்படும். மக்கள் தொகை உயர்வால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க குழு அமைக்கப்படும்.  வி்மான நிலையங்கள் 149 ஆக அதிகரிக்கப்படும்.

வருமான வரி செலுத்தும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.   தனி நபர் வருமான வரி் உச்சவரம்பில் மாற்றம் இல்லை. வரிவிதிப்பு விகிதங்களில்  எந்த வித மாற்றமும் இல்லை.  கார்ப்பரேட் வரி 22% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இறக்குமதி் வரியிலும் மாற்றம் இல்லை.   ரூ.25 ஆயிரம் வரையிலான பழைய வருமான வரி்வழக்குகள் ரத்து செய்யப்படும். நேரடி, மறைமுக வரிவிதிப்புகளிலும் மாற்றம் இல்லை.  மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.  கர்ப்பபை புற்றுநோயை தடுக்க 9 டுதல் 18 வயதுடைய பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.  1 கோடி குடும்பங்களுக்கு சோலார் மின் உற்பத்தி வசதி.  மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  மொத்தம் 58 நிமிடங்கள்  பட்ஜெட் உரையை படித்தார் அமைச்சர் நிர்மலா. தேர்தல் நெருங்குவதால் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில்  எந்தவித சலுகையும் இல்லை என  பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். பெரும்பாலும் 10 வருட சாதனைகளைத்தான் அவர் பட்டியலிட்டார் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!