அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6 வரை நீட்டிக்கப்படுவதாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.21 முதல் மார்ச் 1 வரை விருப்பமனு செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட 1300க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்தனர். மார்ச் 1 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வௌ்ளிக்கிழமையும் ஏராளமானோர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் எடப்பாடி வௌியிட்ட அறிவிப்பில் நிர்வாகிகள் விடுத்த வேண்டுகோளின்படி விருப்பமனு செலுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 6 மாலை 5 மணிவரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
