டில்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில், விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என இதுவரை 8 முறை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் 8 முறையும் கெஜ்ரிவால் ஆஜராக வில்லை. இந்நிலையில், டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அதில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நாங்கள் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வரும் மார்ச் 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
16ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுங்கள்.. கெஜ்ரிவாலுக்கு டில்லி கோர்ட் சம்மன்..
- by Authour
