தஞ்சாவூர் மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் ஆகியோர் நேற்று மாலை பிரசாரம் செய்தனர். அப்போது, அவர்கள் இருவர் சென்ற காரிலும் மற்றும் அவர்களுடன் வந்த 20 பைக்குகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக கொடி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டதாக கிழக்கு போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
