Skip to content

திருப்பத்தூர் அருகே பள்ளி கேன்டெனில் தங்கி படித்த +1 மாணவன் மாயம்..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் கேண்டினில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவன் நேற்று காலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து தங்களது பிள்ளை வீட்டிற்கு வந்ததாரா என கேட்டனர். இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் என் மகன் உங்கள் பள்ளியில் கேண்டில் தான் படித்து வருகிறான் அப்படி இருக்க

எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பினார் அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை காத்திருந்த பெற்றோர்கள் திடீரென கோபப்பட்டு மகன் எங்கே சென்றுள்ளேன் எனவும் உங்கள் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பாருங்கள் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் சிசிடிவி ஆராய்ந்த போது பள்ளி மாணவன் குறித்து தகவல் எதுவும் கிடைக்காத காரணத்தால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட திருப்பத்தூர் தகர போலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தணிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் பள்ளியின் கேண்டில் தங்கி படித்திருந்த 11-ஆம் வகுப்பு மாணவன் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!