சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மருத்துவமனை முதல்வர் அறை கட்டப்பட்டது. இதனை பழமை மாறாமல் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் அவர்களின் அரை வரவேற்பறையில் காவியா என்ற பெண் உதவியாளர் பணியில் இருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக எழுந்து ஓடியதால் உயிர் தப்பினார். மேலும் மொத்தமும் மேற்கூறையும் இடிந்து விழுந்தது பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் சமீபத்தில் தான் இந்த கட்டிடம் வர்ணம் பூசப்பட்டு மறுசீரமைக்கு பணி நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வராத வண்ணம் பிளாஸ்டிக் ரோல் உள்ளிட்டவை கட்டி வருகின்றனர். இந்த கட்டிடம் பாதுகாப்பான இருக்கிறதா என்று மூத்த பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள போலீசார் விசாரணை ஆஸ்பத்திரியின் முதல்வர் அலுவலகம் இடிந்து விழுந்தது . மருத்துவமனை முழுவதும் காட்டு தீ போல் பரவி உள்ளது இது தொடர்பாக அனைவரும் அந்த பகுதியை வந்து பார்த்து செல்கின்றனர்.

