வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. மோங்லாவிற்கு தெற்கில் 130 கிமீ, சாகர் தீவுக்கு 150 கிமீ, கொல்கத்தாவுக்கு 170 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் வாக்கில் மேற்குவங்க – வங்கதேச கடல் பகுதியில் கரையை கடக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கம், அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா, ஜார்கண்ட் வழியே நகர கூடும். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதையடுத்து, தமிழ்நாட்டில் எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை அனைத்து துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.