Skip to content

வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அக்.16- 22 காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று விடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்.22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அதற்கடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. மழை பதிவாகும்.

error: Content is protected !!