Skip to content

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடனடியாக  திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் வந்து  சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இறந்து கிடந்தவர் யார், எந்த ஊர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!