Skip to content

கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…

  • by Authour

கோவை மாநகர் பஜார்  போலீஸ்  நிலையத்திற்கு   நேற்று இரவு 11 மணி அளவில்  ஒருவர்  வந்து, தன்னை 20க்கும் மேற்பட்டவர்கள் துரத்துவதாக  கூறினார். அவர் பதற்றத்துடன் ஓடிவந்தார்.  அவர் லுங்கி, சட்டை அணிந்து இரந்தார். சட்டையின் பின்பக்கம் லேசாக கிழிந்திருந்தது.  போலீசார்  அந்த பகுதியில் யாரும் துரத்தி வருகிறார்களா என பார்த்தனர் அப்படி யாரும்  வரவில்லை.  எனவே அந்த  நபரை  போய்விட்டு காலையில் வாங்க என்று அனுப்பி வைத்தனர். பின்னர் எஸ்.ஐ  போலீஸ் நிலையத்துக்குள் சென்று விட்டார். அந்த நேரத்தில் புகார் கொடுக்க வந்தவர்  பக்கவாட்டு ஏணிபடிகள்  வழியாக  மாடிக்கு சென்று அங்குள்ள எஸ்ஐ  அறைக்குள் புகுந்து உள்பக்கமாக  அங்கே   லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அறைக்கு கதவு கிடையாது.

இன்று காலை தான்  போலீஸ் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த   கோவை போலீஸ் கமிஷனர் சவண சுந்தர்  போலீஸ் நிலையம் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு  செய்தார்.  பின்னர் அந்த நபர் போலீஸ் நிலையத்தில் நுழையும்  சிசிடிவி காட்சிகளையும் நிருபர்களிடம் காட்டினார்.  பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்தவர்  பெயர் ராஜன்.  பேரூரை சேர்ந்தவர். அவர் சற்று மனநலம் பாதித்தவர் போல தெரிகிறது. இது குறித்து  விசாரணை நடத்தப்படும்.  போலீஸ் நிலையத்தில் பணியின்போது  கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த சம்பவம் குறித்து நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

error: Content is protected !!