Skip to content

திருப்பத்தூர் அருகே ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகரம் அடுத்த மான்கானூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் பால் வியாபாரியான இவருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பிறந்த முதல் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட நினைத்து ஆடுவெட்டி பிரியாணி சமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ஆடு வெட்டுவதற்காக கதிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் (47) என்பவரை வரவழைத்துள்ளனர். ஆடு வெட்டி விட்டு அதனை தோல் உரிக்க வீட்டின் பின்புறம் இருந்த வாழை தோப்பில் இருந்த மின்சார கம்பத்தின் அருகே சென்றபோது அருந்துகிடந்த மின் கம்பியை மிதித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து அவரைக் காப்பாற்ற நினைத்து வீட்டு உரிமையாளர் செந்தில்குமார் (47) மற்றும் அவரது தாயார் மணியம்மாள் (71) ஆகிய இருவரும் சென்று காப்பாற்ற முயன்ற போது அவர்களுக்கும் மின்சாரம் தாக்கி உள்ளது. மின்சாரம் தாக்குவதை அறிந்த அவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மின்சார விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு வெட்ட வந்தவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!