திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் மயானத்தின் அருகில் அழுகிய நிலையில் , அருகில் மண்டை ஓட்டுடன் ஆண் சடலம் இருப்பதாகவும் அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாக ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காவல்துறை யினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அழுகிய நிலையில் மண்டை ஓட்டுடன் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக இருப்பவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?எனவும்
கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்
ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் கடந்த மாதம் அங்குள்ள காலி வீட்டு மனை இடத்தில் எரியூட்டப்பட்ட பகுதியின் அருகில் இதே போன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அது நாளடைவில் மனநோயால் சுற்றி திரிபவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் தொடரும் இதுபோன்ற மர்ம மரணங்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்
மேலும் வெளியூர் பகுதிகளில் இருந்து கொலை செய்யப்பட்டு கொண்டு வந்து வீசிவிட்டு செல்கின்றனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்