கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிவிதாக நடிகர் ரவி மோகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் அண்மையில் நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில், பாடகி கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆர்த்தி ரவி. இதற்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் யாரையும் குறிப்பிடாமல் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் பதிவொன்றை வெளியிட்டார். அதில் “ஆண்மையுள்ள ஒருவன் ஒருபோதும் கலவரமான உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியைத் தரும் பெண்ணை நோக்கியே செல்லும். அந்த மென்மை நடிப்பல்ல, அது அமைதியின் வலிமை. அந்த மென்மையானவள் அவன் வலிமையுடன் எப்போதும் போட்டியிடமாட்டாள். மாறாக, அதை சமநிலைப்படுத்துவாள். அந்தப் பிணைப்பில் இருவரும் ஒருவருக்கொருவர் தத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதோடு, தங்கள் சுயத்தையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.