திருச்சி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவெறும்பூர் வடக்கு-தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகரம் மற்றும் கூத்தப்பார் பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள் மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் திருவெறும்பூர் தொ.மு.ச. அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிற முகாம்களில் முழுமையாக கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பதும் இறந்த

மற்றும் மாற்றமான வாக்காளர்களை பெயர் நீக்கம் செய்வதும் போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மாவட்ட கழக்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இந்த பார்வையாளர்கள் இதை கண்காணிக்க கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி கங்காதரன், நகரக்கழகச் செயலாளர் காயம்பு, பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு பாக முகவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.