சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள். சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சிறுமி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் தந்தை, மற்றும் தாயார் ஆகிய இருவருடனும் செல்ல மறுத்த நிலையில், அவரை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி கூறினார். இந்த நிலையில் சிறுமி மாடியில் இருந்து குதித்தார். இதில் அவரது கால்கள் முறிந்தது. பலத்த காயங்களுடன் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி
- by Authour
