கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை இன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேயர், துணை மேயர் ஆகியோர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும் இந்த நிகழ்வில் நான்காண்டு கால தமிழக அரசின் சாதனை விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அதனால் பொதுமக்கள் அடைந்த பயன் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து உணவு வழங்கல் துறை சார்பில் நடமாடும் காணொளி விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கப்பட்டது.