கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் விஜயின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் விஜய்க்கு எதற்கு தெரிவித்து பல்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர் . அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் விஜய்க்கு எதிராக தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு 39 நபர்களை பழிவாங்கிய விஜயை கொலை குற்றவாளி என வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் இந்த போஸ்டர் திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது