Skip to content

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 , பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர் உள்ளனர். தமிழகம் முழுவதும் 27,53,793 வாக்காளர் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் மூலமாக தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இப்போது கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.

error: Content is protected !!