ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று வேனில் சென்றனர். ஊருக்கு திரும்பும் போது புல்லா சமுத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பிரேம் குமார் (30), அதர்வா (2), ரத்னம்மா (70), மனோஜ் (32) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…
- by Authour
