பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக உள்ள நிலையில் இன்று நாமக்கல் வேலகவுண்டபட்டியில் உள்ள கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை ஆசிரியர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஆனைமலை மாசாணியம்மன் கோவில், ஆழியார் அணை, பூங்கா பகுதிக்கு வருகை புரிந்தனர், இவர்கள் அறிவித்திருக்கோவில் எதிரே தடை செய்யப்பட்ட ஆழியார் அணை பகுதிக்குள் சென்று புகைப்படம் மற்றும்

அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர் இதனை அடுத்து அங்கு வந்த ஆழியார் காவல் நிலைய போலீசார் ஆசிரியர்களிடம் இது தடை செய்யப்பட்ட பகுதி இங்கு புதை மணல் அதிகமாக இருப்பதால் பல பேர் உயிரிழந்துள்ளனர் ஆகையால் அனைவரும் அனைப்பதியை விட்டு வெளியேறுகின்றன எச்சரிக்கை செய்து அனுப்பினர் மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆசிரியர்களே ஆபத்தான பகுதிக்கு அழைத்துச் சென்றது வேதனைக்குரியது என போலீசார் தெரிவித்தனர்.

