துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலம் கருதி ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார். இன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்திய வரலாற்றில் இப்போது தான் முதன் முறையாக ஒரு துணை ஜனாதிபதி ராஜினாமா செய்து உள்ளார். (இதற்கு முன் விவி கிரி, ஜனாதிபதி ஆவதற்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்)
உடல் நலனை கருதி ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டாலும், மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் தன்கர் , காங்கிரஸ் தலைவர் கார்கே, மற்றும் ஆம் ஆத்மி கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார். இப்படி எதிர்க்கட்சித்தலைவர்களுடன் ஆரோக்கியமான தொடர்பை அவர் ஏற்படுத்தியது பாஜகவுக்கு பிடிக்கவில்லை.
தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்ட சில நிமிடங்களில், பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் நாட்டுக்கு சேவை செய்ய தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. அவர் ஆரோக்கியத்துட் வாழ வாழ்த்துகிறேன் என கூறி உள்ளார்.