Skip to content

திருச்சியில் அதிரடி: பால் பண்ணை – காந்தி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

திருச்சி மாநகராட்சியின் முக்கியப் பகுதியான பால் பண்ணை முதல் காந்தி மார்க்கெட் வரையிலான சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

திருச்சி – தஞ்சாவூர் சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியாக பால் பண்ணை சாலை உள்ளது. இந்தப் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளின் மேற்கூரைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீட்டிக்கப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். பால் பண்ணையில் தொடங்கி காந்தி மார்க்கெட் வரை சாலையின் இருபுறமும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் மற்றும் தற்காலிகக் கட்டுமானங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன. இனி இந்தப் பகுதியில் போக்குவரத்து சீராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!