Skip to content

காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர் உறுதி

கோவையில் உயிர் அமைப்பின் சார்பில் அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து விமான நிலையம் வரை சாலை பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்து கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள்,கல்லூரி மாணவர்கள்,என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் தனியார் ஹோமில் குழந்தை ஒருவரை தாக்கும் வீடியோ வெளியானது குறித்த கேள்விக்கு,
காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சட்ட ரீதியாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பூ மார்க்கெட் வீடியோ விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், காவல்துறையினர் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

U-Turn சம்பந்தமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். சொகுசுகர்களுக்கு வாகன அபராதம் விதிக்காமல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதித்து வருவதாக குறித்து கேள்விக்கு காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு இனி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.

error: Content is protected !!