Skip to content

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ்த்திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று  காலை 8.15 மணி அளவில்  காலமானார்.  அவருக்கு 75  அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு       சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று  காலமானார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்,  தொடக்கத்தில் ஆசிரியராக இருந்தார். பின்னர் நடிகரானார்.  அவர் 1974ல்  அவள் ஒரு தொடர்கதை  படத்தின்  மூலம் அவர் திரைத்துறைக்கு வந்தார்.  சுமார் 150 படங்களில் நடித்துள்ளார்.  அவர் நடித்த படங்களில் கன்னிபருவத்திலே,   தண்ணீர் தண்ணீர், அந்த 7 நாட்கள் முக்கியமான படங்கள்.  ராஜ்கண்ணு  தயாரித்த கன்னிப்பருவத்திலே படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர்.  ஆனால் இவரது குடும்பம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தில் வசித்து வந்தது.  பியூசி வரை படித்தவர்.  பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டார். சென்னையில் உள்ள  பள்ளிகளில்  1972 முதல் 79 வரை ஆசிரியராக பணியாற்றினார்.

இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும்,  பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்.  மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே இறந்து விட்டார்.  இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜேஷ் ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர்.

சின்னத்திரைகளிலும் அவர் நடித்து உள்ளார்.  மலையாள மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.  சிறந்த எழுத்தாள்,  டப்பிங் கலைஞராகவும்  பயிணாற்றி உள்ளார்.   ஒரு பன்முக கலைஞராக செயல்பட்ட  ராஜேஷ் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பு என  பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் ராஜேஷ் மறைவுக்கு திரையலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது.

 

error: Content is protected !!