கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த விழா நேற்று நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
நேற்று முன்னணி திரை நட்சத்திரங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 50 ஆண்டுகள் சினிமாவில் நடத்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
எனக்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி. 50 ஆண்டு சினிமா பயணம் வேகமாக ஓடிவிட்டது. சினிமாவையும், நடிப்பையும் என்றும் விரும்புகிறேன். இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்கவே விரும்புகிறேன். என்னை வாழ வைத்த தமிழக மக்கள், திரைத்துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிஎன்று இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

