Skip to content

சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.

‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் “நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் பராசக்தியைதேர்வு செய்தேன். ‘பராசக்தி’ படத்தில் நடித்தது எனது வாழ்நாள் பெருமை. சினிமாவிற்கு ஏற்பட்ட சில மாற்றங்கள் செய்தே படம் எடுக்கப்பட்டது” என்றார்.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!