நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் கரூரில் வெளியானது ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேல தாளங்களுடன் நடனமாடி உற்சாக கொண்டாட்டம். கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
6 வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘மாமன்’ உருவாகி இருக்கிறது. இன்று தமிழக முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ள மாமன் திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் மட்டும் வெளியான நடிகர் சூரி மாமன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேல தாளங்களுடன் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர் அதனைத் தொடர்ந்து அனைவரும் குடும்பத்துடன் திரைப்படத்தை காண சென்றனர்.