கேரளா மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் கேரள மாநிலத்தின் முதல் பாஜக மக்களவை எம்.பி. என்ற பெருமைக்குரியவர். இவர் நேற்று துணை அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் இன்று அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இருந்து முதன் முதலாக எம்.பியாக வெற்றி பெற்ற தனக்கு துணை மந்திரி பதவி வழங்கியதால் அவர் அதிருப்தி அடைந்து பதவி விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசவும் முடிவு செய்திருப்பதாக தெர்ிகிறது.
துணை மந்திரி பதவி கொடுத்ததால் அதிருப்தி…. நடிகர் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு
- by Authour
