Skip to content

சந்திரசேகருக்கு ஆபரேஷன்…..தந்தை உடல் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் தந்தையும்,  இயக்குனருமான  எஸ்.ஏ.சந்திரசேகருக்கு  கிட்னியில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக  சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது  சந்திரசேகர், வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில்  படப்பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா  சென்றிருந்த நடிகர் விஜய்,  சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது  தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரையும், அம்மாவையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!