நடிகை விஜயலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான பாலியல் புகார் வழக்கு, தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் நீண்ட காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கின் தொடக்கம் 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது.
இன்று (செப்டம்பர் 12) உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சீமானுக்கு எதிராக கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய கோரிய சீமானின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க முடியாது என்றும், முதலில் சீமான் விஜயலட்சுமியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆம், கடந்த 2011-ல் நடிகை விஜயலட்சுமி, சீமான் திருமண வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி பாலியல் உறவு வைத்ததாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. அப்போது, இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும் நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு மேலும் சீமான் மேல்முறையீட்டு மனு செப். 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து, சீமான் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தியுள்ளார்.