ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 2,205 பேர் பலியானதும், 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப்படையினர் சென்றடைய மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை, மலைக் கிராமங்களில் வசித்த மக்களின் நிலைக்குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், பலி எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.