Skip to content

அதிமுகவை-பாஜக முழுங்கும்…. செல்வபெருந்தகை

விரைவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுகவை பாஜக விழுங்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் – செல்வப்பெருந்தகை

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “திருச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை ரயில்வே துறையினர் பதித்துள்ளார்கள். முதலமைச்சர் கண்டனம் தெரிவித்த பின் அது அகற்றப்பட்டது. ஜவகர்லால் நேரு கூறியது இரு மொழிக் கொள்கை. தமிழ்நாடு எப்பொழுதும் மூன்றாம் மொழி ஏற்றுக்கொள்வது மாநில அரசு மற்றும் மக்களுடைய விருப்பம். இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கும் மூன்றாம் மொழி திணிக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் பின் தொடர்கிறோம். ஒரு மாநில மக்கள் என்ன விரும்புவதோ அதுதான் ஜனநாயகம். ஜனநாயகத்திற்கு எதிராக இருப்பது தான் பாஜக. வேண்டுமென்றே தமிழில் இருப்பதை இந்தியில் என்று மாற்றுவார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் மாற்றினார்கள். அனைத்திலும் திணிக்க வேண்டும் வரலாற்றை மறைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் வெளிப்பாடு.

திமுக விடம் போராடி தான் காங்கிரஸ் தொகுதியை பெற்றிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுகவிடம் பாஜகவினர் போராடாமல் தொகுதியை வாங்க சொல்லுங்கள். நாங்கள் போராடி வாங்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ் மண்ணையும் தாய் மக்களையும் பாதுகாக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணி. வலிமையான கூட்டணி தமிழ் மண்ணை பாதுகாக்கின்ற கூட்டணி. தமிழகத்தில் பாஜக ஆர்எஸ்எஸ் வெற்றிபெற முடியாது என்பதை நாங்கள் இந்த தேர்தலில் நிரூபித்து காட்டுவோம். நான் இதை பலமுறை கூறியிருக்கிறேன். ஒவ்வொரு மாநிலமாக கட்சிகளை விழுங்கி முடித்துக் கொண்டு கட்சிகளை அழிக்கும் வேலை பாஜக செய்கிறது. மகாராஷ்டிராவில் செய்திருக்கிறார்கள். பீகாரில் தற்போது செய்திருக்கிறார்கள் அடுத்த குறி தமிழ்நாடு. பாதுகாப்பாக அதிமுக இல்லை இதுவரை. அவர்கள் கட்சியை விழுங்குவார்கள் ஸ்வாகா செய்வார்கள். தலைவர்களை மிரட்டுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.

எங்களால்தான் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் கிடைத்துள்ளது என தவெக செங்கோட்டையன் கூறியுள்ளார். காங்கிரஸ் பேரியக்கம் 140 ஆண்டு கால வரலாற்று சிறப்பு வாய்ந்த இயக்கம். நேற்று முளைத்த காளான் இல்லை. எத்தனையோ வெற்றிகளையும் பார்த்தது. எங்கள் கூட்டணி சுமுகமான தமிழ்நாட்டிற்கு தேவையான கூட்டணி. எங்கள் தலைவரும் முதலமைச்சர் அண்ணன் தம்பி உறவு கொண்டவர்கள். இதை யாராவது சிதைக்க நினைக்க வேண்டுமென்றால் அவர்கள் தான் தோல்வியடைவார்கள்” என்று கூறினார்.

error: Content is protected !!