Skip to content

ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

கரூரில், நிலப் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்து 92 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு நிலத்தை வாங்கித் தராமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றிய முன்னாள் அதிமுக ஒன்றிய குழு தலைவரும், கரூர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளருமான பாலமுருகன், கட்சிக்கு விரோதமாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கட்சியிலிருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், கரூர் ஊராட்சி ஒன்றிய குழு அதிமுக முன்னாள் தலைவராக இருந்த நிலையில், தற்போது அதிமுக கரூர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம், கரூர் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை வாங்கி தருவதாக கூறி 92 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு நிலம் வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் கரூர், வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது பாலமுருகன் பிணையில் வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன் கட்சிக்கு விரோதமாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகமும் கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக நிவாகி பாலமுருகனை கட்சியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாலமுருகன் வழக்கில் சிக்காமல் இருக்க, விரைவில் திமுகவில் இணைய உள்ளதை அறிந்து கொண்ட அதிமுக தலைமை பிரிவு இவரை கட்சியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!