Skip to content

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் படத்திற்கு செருப்பு மாலை .. பொள்ளாச்சியில் பரபரப்பு

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் கூறி தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இன்று பொள்ளாச்சியில் பேருந்து நிலையம், உடுமலை சாலை பகுதியில் உள்ள சிக்னல்களில் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம் ஆர் விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் ஆகியோரின் உருவ பொம்மைகளில் செருப்பு மாலை அணிவித்து, பாவாடை அணிந்து இருப்பது போல் மர்ம நபர்கள் தொங்க விட்டுச் சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து சென்ற போலீசார் உருவ பொம்மைகளை அகற்றினர். இந்த உருவ பொம்மைகளை தொங்கவிட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!