திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது…
கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய பால்பண்ணை சாலைப்போக்குவரத்து சந்திப்பில் ஏற்படுகின்ற கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுங்கள்..
கடந்த 2016ம் ஆண்டு முதல் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2021 முதல் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றும் மகேஸ் அவர்களே, தேர்தல் சமயத்தில் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம்.
அதில் தீர்வு காணாமல் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்தீர்களா? தெரிந்து கொண்டீர்களா உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அவர்களே? என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

