Skip to content

VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் வடக்கு ஒன்றியம், கடம்பங்குறிச்சி நடுத்தெரு அதிமுக கிளைச் செயலாளர் பி. பாண்டியன் மற்றும் ஏ. மணிகண்டன் ஆகியோர் இன்று தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் வாங்கல் ஈ.வெ.ரா தெருவைச் சேர்ந்த முத்து, கரண்ராஜ், சங்கர், நிசாத் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கரூர் மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கரூரில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைவது அந்தப் பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!