அரியலூர் அண்ணா சிலை அருகில் நகர அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமை கொறடாவும் அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு மின்கட்டண உயர்வு பால் விலை உயர்வு உள்ளிட்ட ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் செயல்படும் திமுக அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட
நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கான உரிமைத் தொகை ஆயிரம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.