Skip to content

NDA கூட்ட பேனரில் இபிஎஸ் படம் புறக்கணிப்பு-அதிமுகவினர் அதிர்ச்சி

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் அந்த மைதானத்தின் நுழைவு வாயிலில் என்.டி.ஏ வில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களின் புகைப்படுத்துடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் அந்த பேனரில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டின் என்.டி.ஏ வின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூறப்படும் நிலையில் அவர் படம் இல்லாமல் பேனர் அமைக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை தவிர, நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் பிற கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரது படமும் இடம்பெற்றுள்ளன.

error: Content is protected !!