Skip to content

அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி

உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த 1.25 லட்சம் மகளிர் அணியினர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் மாநாடு பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை திமுக துணை பொதுச்செயலாளரும் – நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுவதும் பெண்கள் திமுக சார்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு திமுக மறுபடியும் வெற்றி பெற வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர். அதனை எடுத்து காட்டும் விதமாக இந்த மாநாடு அமையும்.

அதிமுக தேர்தல் வாக்குறுதி குறித்து கேட்டதற்கு,

அதிமுக ஆட்சி காலத்தில் திட்டமாக அறிவித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள். மீண்டும் அதை தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளார்கள் எனவே அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

எங்களுடைய கூட்டணி மக்களுடன் உள்ளது. நிச்சயமாக இந்த கூட்டணி வெற்றி பெறும்.

அவர்கள் யாரை சேர்த்தாலும் – உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இல்லாததது குறித்து கேட்டதற்கு,

இன்னும் கொஞ்ச காலத்தில் அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை தான் எங்கள் எல்லோருக்கும் உள்ளது.

நாளை பிரதமர் தமிழகம் வருவது குறித்து கேட்டதற்கு, தேர்தல் வருகிறது. அதனால் பிரதமர் அதிக தடவை வருவார் என கனிமொழி தெரிவித்தார்.

error: Content is protected !!